
மௌனங்களுக்கூடாக
சிந்திக்கிடந்த வார்த்தைகள்
வெப்பம் தாளாமல்
சூடேறுகின்றன.
மெலிதாக கைவிரல்கள்
நடுங்கியவன்னம்
தொலைபேசியின்
மறுமுனையிலிருந்து
பேசிக் கொண்டிருந்தேன்
நான்.
பயணத்தில் எங்கோ
தொலைக்கப்பட்ட
பையில்
நமது கடைசி
சந்திப்பின்போது
பரிமாறிய அன்பு
நொறுங்கிக் கிடக்கிறது
பிரிக்கப்படாத பிஸ்கட்டென.
சில நிமிட
நல விசாரிப்புகளுக்குப் பிறகு
மீண்டும் இடமாறிக்கொள்கிறோம்
நாம்.
இன்று
எனது கனவில்
மழைத்துளிகள்
விழுந்து நொறுங்கி
பாதையெங்கும்
பரவிக்கிடக்கின்றன
கண்ணாடிச் சில்லுகள்.
ம்ம்ம்ம்ம்ம்........
ReplyDeleteமாணிக் கவிதைகள் மிக அருமை.
ReplyDeleteநன்றி செந்தில் ...
ReplyDeleteவருகைக்கு நன்றி துரோகி ... ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. :(
ReplyDeleteExcellent...
ReplyDeleteநல்லா இருக்குது மாணிக்! [அப்பிடியே ம்ம்ம்ம்ம்... எண்டு உச்சரிச்சு பாருங்க ] :P
ReplyDeleteநன்றி செந்தில் அண்ணன்
ReplyDelete//எனது கனவில்
ReplyDeleteமழைத்துளிகள்
விழுந்து நொறுங்கி
பாதையெங்கும்
பரவிக்கிடக்கின்றன//
அருமையான வரிகள்...
நன்றி உமா ...
ReplyDeleteபயணத்தில் எங்கோ
ReplyDeleteதொலைக்கப்பட்ட
பையில்
நமது கடைசி
சந்திப்பின்போது
பரிமாறிய அன்பு
நொறுங்கிக் கிடக்கிறது
பிரிக்கப்படாத பிஸ்கட்டென.
மேற்கண்ட வரிகள் மிக அருமையானவை. உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. உயிரோசையிலும் பார்த்தேன். வாழ்த்துக்கள்