Wednesday, June 2, 2010

நானற்ற எனது இருக்கை


நானற்ற
எனது இருக்கையின்
வெளி நிரம்பிக் கிடக்கிறது
எனது சொற்களால்.

எனது காபி நிற பாட்டிலில்
எஞ்சியிருந்த
நீர் வற்றிப்போகிறது
சாலையோரக் குளமென.

நான் நடந்து சென்ற
பாதைகளிலிருந்து
எனது அடிச் சுவடுகள்
சாரை சாரையாக
ஊர்ந்து செல்கின்றன
புற்று நோக்கி.

எனது ரேகை பதிந்த
விசைப் பலகையின்
விசைகள் யாவும்
வழிதவறி ஊர்மாறி
மொழியற்றுப் போகின்றன.

எனது முகத்தை
கண்ணாடியென
பிரதிபலித்த கணினியின்
நினைவழிந்து போகிறது
தொலைதூரத்தில்
தன்னை இழக்கும் பாடலென.

இக்கனத்தில்
நான் நிறைந்து கொண்டிருக்கிறேன்

உனது வெளியில்
சொற்களெனவும்
நீர் எனவும்
மொழி எனவும்
பாடல் எனவும்
நீ எனவும்....

குறிப்பு : 07 - 06 - 2010 உயிரோசை மின்னிதழில் வெளியான கவிதை


5 comments:

  1. நானற்ற
    எனது இருக்கையின்
    வெளி நிரம்பிக் கிடக்கிறது
    எனது சொற்களால்.
    எனது காபி நிற பாட்டிலில்
    எஞ்சியிருந்த
    நீர் வற்றிப்போகிறது
    சாலையோரக் குளமென.

    நான் நடந்து சென்ற
    பாதைகளிலிருந்து
    எனது அடிச் சுவடுகள்
    சாரை சாரையாக
    ஊர்ந்து செல்கின்றன
    புற்று நோக்கி.

    எனது ரேகை பதிந்த
    விசைப் பலகையின்
    விசைகள் யாவும்
    வழிதவறி ஊர்மாறி
    மொழியற்றுப் போகின்றன.

    எனது முகத்தை
    கண்ணாடியென
    பிரதிபலித்த கணினியின்
    நினைவழிந்து போகிறது.

    தொலைதூரத்தில்
    தன்னை இழக்கும் பாடலென.
    இக்கனத்தில்
    நான் நிறைந்து கொண்டிருக்கிறேன்'

    உனது வெளியில்
    சொற்களெனவும்
    நீர் எனவும்
    மொழி எனவும்
    பாடல் எனவும்
    நீ எனவும்....


    இப்படி வந்திருக்க வேண்டும்... அற்புதமான கவிதை நடை... நிறைய எழுதுங்கள்...

    ReplyDelete
  2. அனுபவங்கள் அழகாய் இங்கு கவிதை படிக்கிறது . நல்லா இருக்கிறது . தொடரட்டும் கவிதைப்பயணம்

    ReplyDelete
  3. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    shankarp071@gmail.com
    http://wwwrasigancom.blogspot.com/

    ReplyDelete
  4. நன்றி செந்தில். கவிதை வரிகள் நீங்கள் சொன்னது போல பிரித்துப் போட்டுவிட்டேன்.

    ReplyDelete
  5. மிகவும் அழுத்தமான நடை. எனக்குப்புரிய கொஞ்சம் நேரம் ஆனது. நான் இன்னும் வளரனும் போல.

    ReplyDelete