Thursday, June 3, 2010

பிறந்தநாள் ஒலிபெருக்கி


இன்று காலையில்
உனது புகழ் பாடத்தொடங்கிய
போஸ்ட்டு மர
ஒலிபெருக்கியிலிருந்து
பீய்ச்சியடிக்கிறது...
பீரங்கிகளால்
தலை சிதறடிக்கப்பட்ட
எங்களது குழந்தைகளின்
இரத்தமும்
மரண ஓலத்திற்குப் பின்னான
அமைதியும்.

1 comment:

  1. இது ரொம்ப நேரடியா இருக்கு. என்னை மாதிரி ஆட்களுக்கு இதுதான் நல்ல கவிதையா தோணும் போல

    ReplyDelete